திருமண விளம்பரம் பார்த்து வந்த திருடன்: சினிமா பாணியில் நகைகளை சுருட்டி ஓட்டம்

திருமண விளம்பரம் பார்த்து வந்த திருடன்: சினிமா பாணியில் நகைகளை சுருட்டி ஓட்டம்
X
மாப்பிள்ளை பார்க்க வந்தது போல் நடித்து பூஜை செய்து தங்க நகைகளை திருடிச் சென்ற, சில்வர் சீனிவாசனை போலீசார் தேடி வருகின்றனர்.

மாப்பிள்ளை பார்க்க வந்தது போல் நடித்து பூஜை செய்து தங்க நகைகளை திருடிச் சென்ற சில்வர் சீனிவாசனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் ஐயப்பா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது உறவினர் சமூக ஆர்வலரான சந்தானம், இவர் தனது உறவினர் சீனிவாசனின் மகனுக்கு வரண் வேண்டும் என பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து விட்டு முதியவர் ஒருவர் குரோம்பேட்டையில் உள்ள சமூக ஆர்வலர் சந்தானத்தை அணுகி உள்ளார்.


சந்தானமும் அவரை பம்மலில் உள்ள தனது உறவினர் சீனிவாசன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற முதியவர் தனது மகள் வங்கியில் வேலை பார்ப்பதாக பேசி அங்கேயே உணவும் அருந்திவிட்டு அப்படியே பூஜை ஒன்று செய்தால் நன்றாக இருக்கும் என கூறி வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.பூஜையில் நகைகளை வைத்து பூஜிக்க வேண்டும் என்று கூற நகைகளை துணியில் சுற்றி வைத்து பூஜையை செய்து முடித்துள்ளார். மூன்று நாட்கள் கழித்து தான் துணியை பிரித்து பார்க்க வேண்டும் அப்போது தான் இந்த வரண் கைக்கூடும் என கூறிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவே இல்லை.

பின்னர் பூஜையில் வைத்த 2 சவரன் தங்க நகைகளை, துணியை பிரித்து பார்த்தால் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீனிவாசன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.
சமூக ஆர்வலர் சந்தானத்தின் வீட்டிற்கு வந்த போது அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசாரிடம் காண்பித்த போது அவர் தான் சில்வர் சீனிவாசன் என்று போலீசார் தெரிவித்தனர். 87 வயதான முதியவர் 'சில்வர் சீனிவாசன்' பல ஆண்டுகளாக திருடி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil