தொழிலாளர்களுக்கு இனிப்பு வாங்கியதில் எந்தமுறைகேடும் இல்லை:போக்குவரத்து அமைச்சர்
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் புதிய பேருந்துகளை தொடக்கி வைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியின்போது இயக்கப்பட்ட பேருந்துகள் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் 17 பழைய மற்றும் புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கத்தை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்குவதில் எந்த வித தவறும் நடைபெறவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் 262 ரூபாய்க்கு இனிப்புகள் வாங்கப்பட்டது. ஆனால் இந்த முறை 230 ரூபாய்க்கு, அரசு நிறுவனமான ஆவினில் இனிப்புகள் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே இதில் எந்த முறைகேடும் இல்லை. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார். தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஆறு இடங்களில் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மீண்டும் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 17 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu