செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவர்களின் புதிய பாட புத்தங்கங்கள் திருட்டு: போலீசார் விசாரணை

செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவர்களின் புதிய பாட புத்தங்கங்கள் திருட்டு: போலீசார் விசாரணை
X
பள்ளி மாணவர்களின் புதிய பாடப்புத்தகங்கள் திருட்டு போன அனக்காபுத்தூர்  அரசு பள்ளி.
செங்கல்பட்டு மாவட்டம் அனக்காபுத்துர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின், புதிய பாட புத்தங்கங்கள் திருட்டுப்போனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் அடுத்த அனக்காபுத்துரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் இன்று 6ம் மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதற்க்காக புதிய பாடதிட்டத்தின் புத்தகங்கள் பள்ளியின் அறை ஒன்றில் வைத்திருந்தனர் . மாணவர்களுக்கு புத்தகங்களை விநியோகம் செய்வதற்காக ஆசிரியர்கள் பார்த்த போது அறையின் பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

பின்பு உள்ளே சென்று பார்த்த போது புத்தகங்களின் முன் பக்கம் மற்றும் பின் பக்க அட்டைகள் கிழிக்கபட்டு மீதமுள்ளவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது . சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர்சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார.

இதனையடுத்து அடுத்து போலிசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் .பாட புத்தகங்கள் பள்ளியில் இருந்து திருடபட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கோடைக்காலம் வந்துவிட்டாலே நுங்கு தான் !..இந்த நுங்கு நம்ம உடம்புக்கு என்னென்ன நன்மைகளை தருதுனு..பாக்கலாமா..!