மாயமான மாணவிகள் 5 ஆண் நண்பர்களோடு சென்னையில் சிக்கினர்

மாயமான மாணவிகள் 5 ஆண் நண்பர்களோடு சென்னையில் சிக்கினர்
X
பைல் படம்
இரு பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக தேடி வந்த நிலையில் விடுதியில் 5 ஆண் நண்பர்களோடு போலீசார் பிடித்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் இரண்டு பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக இரு மாணவிகளின் பெற்றோர்கள் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னலை வைத்து தேடி வந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அங்கு சென்று பார்த்த போது 5 ஆண் நண்பர்களோடு விடுதி அறையில் தங்கி இருந்தனர். மாணவிகளை மீட்டு 5 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் மாணவிகள் இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த ஆண் நண்பர்களை வரவழைத்து சென்னையில் பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்து விட்டு இரவு ஆனதும் விடுதியில் அறை எடுத்து தங்கி விட்டதாக தெரிவித்தனர்.
மாணவிகள் சிறுமிகள் என்பதால் திருப்பத்தூரை சேர்ந்த தொல்காப்பியம்(19), திருவெற்றியூரை சேர்ந்த சுரேன்(எ)அப்பு(22), பட்டாபிராமை சேர்ந்த சஞ்சய்(19), விருத்தாச்சலத்தை சேர்ந்த வினித்(20), ஒரு சிறார் உட்பட 5 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறார் ஒருவரை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட இரு மாணவிகளை காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs