கண்களை கட்டிக்கொண்டு பொருட்களின் நிறம், வடிவம், எழுத்துகளை கூறி உலக சாதனை

கண்களை கட்டிக்கொண்டு பொருட்களின் நிறம், வடிவம், எழுத்துகளை கூறி உலக சாதனை
X

கண்களை கட்டிக்கொண்டு பொருட்களை கண்டுபிடித்து உலக சாதனை படைத்த ஆசிரியர்

குரோம்பேட்டையில் ஆசிரியை ஒருவர் கண்களை மூடிக்கொண்டு 10 நிமிடத்தில் 341 பொருட்களின் நிறம், வடிவம், எழுத்துகளை கூறி உலக சாதனை படைத்தார்

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் ஐஸ்வர்யா என்பவர் இன்று குரோம்பேட்டையில் நடந்த உலகசாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது இரு கண்களையும் துணியால் கட்டு கொண்டு 10 நிமிடத்தில் 341 பொருட்களின் நிறம், அதன் வடிவம், மற்றும் அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளை அச்சு பிசகாமல் அப்படியே கூறி அசத்தினார்.

கண்களை கட்டிக்கொண்டு இவ்வாறு பொருட்களின் நிறம், வடிவம் ஆகிவற்றை கூறிய ஐஸ்வர்யாவிற்கு லிங்கம் புக் ஆப் ரெக்கார்ஸ் சார்பில் உலக சாதனை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதினை லிங்கன் புக் ஆப் ரெக்கார்டு அமைப்பின் நிறுவனர் ஜோசப் இளம்தென்றல் வழங்கினார்.

Tags

Next Story