தாம்பரம் மாநகராட்சி 10 வது வார்டில் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

தாம்பரம் மாநகராட்சி  10 வது வார்டில் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
X

பம்மல் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் பல்லாவரம் தொகுதி இ.கருணாநிதி எம்.எல்.ஏ ஈடுப்பட்டார்.

தாம்பரம் மாநகராட்சி பம்மல் 10வது வார்டில் பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பிவ் ஈடுபட்டார்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் மார்ச் 19தேதி நடைபெற உள்ளது. திமுக கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈனுப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தாம்பரம் மாநகராட்சி 10வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் மதினா பேகம் ஹனிபாவை ஆதரித்து பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி பம்மல் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி, திருவள்ளுவர் தெரு பொன்னி நகர் பிள்ளையார் கோவில்,கண்ணகி தெரு உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார். 10வது வட்ட செயலாளர் ஜான்சன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் ஜி.செல்வராஜ், பம்மல் நகர சிறுபான்மை அமைப்பாளர், இரா, வீரமுத்து அவைத்தலைவர், வெங்கடேசன் வட்ட துணை செயலாளர்,திமுக நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!