குரோம்பேட்டை அரசு மருத்துவமனை எதிரே சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்

குரோம்பேட்டை  அரசு மருத்துவமனை எதிரே சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்
X

சென்னை குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனை எதிரே ஜி.எஸ்.டி.சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்

நடைபாதையில் மழைநீர் தேங்கி இருப்பதால் பாதசாரிகள் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்

சென்னை குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனை எதிரே ஜி.எஸ்.டி.சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட நேரிட்டது.

சென்னை குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை எதிரே, ஜி.எஸ்.டி.சாலையில் இன்று பெய்த கன மழையின் காரணமாக சாலையின் ஓரம் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது .தாழ்வான பகுதி என்பதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. நடைபாதையில் மழைநீர் தேங்கி இருப்பதால் பாதசாரிகள் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர். உடனடியாக தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மழை நீரை விரைந்து அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது