பல்லாவரத்தில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் : 5 பேர் கைது, 4 இளம்பெண்கள் மீட்பு

பல்லாவரத்தில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் : 5 பேர் கைது, 4 இளம்பெண்கள் மீட்பு
X

பல்லாவரத்தில் பாலியல் தொழில் நடத்தியதாக போலீசாரால்  கைது செய்யப்பட்டவர்கள்.

பல்லாவரத்தில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் செய்த 5 பேர கைது செய்யப்பட்டனர். 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.
சென்னை பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள குவாலிட்டி இன் ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீசார் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில் சமபவ இடத்திற்கு இன்று அதிரடியாக பல்லாவரம் உதவி ஆணையர் ஆரோக்கிய ரவிந்திரன் தலைமையில், ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் விடுதியில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
பாலியல் தொழிலை நடத்தி வந்த திருச்சியை சேர்ந்த சந்தோஷ்குமார்(39), கடலூரை சேர்ந்த சரத்குமார்(25), வண்டலூரை சேர்ந்த சக்திவேல்(33), குன்றத்தூரை சேர்ந்த திருமலை(35), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த குமாரவேல்(32), ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அங்கிருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 4 இளம்பெண்களையும் மீட்டனர்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் பல்லாவரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்