குரோம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு.

குரோம்பேட்டை அருகே  மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு.
X

குரோம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவி

குரோம்பேட்டை அருகே வீட்டின் மொட்டை மாடியில் தம்பியுடன் விளையாடி கொண்டிருந்த 13 வயது பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரம் புறநானூறு தெருவில் வசிப்பவா் சசிகலா. இவருடைய கணவர் பரணிதரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் பணியாற்றிய போது அங்கு உயிரிழந்துள்ளார்.

இதனால் சசிகலா 13 வயது மகள் சஞ்சனா, மற்றும் மகன் பிரபஞ்சன் (10) ஆகியோருடன் வசித்துவந்தாா். சஞ்சனா சேலையூரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துவந்தாா்.

இந்நிலையில் நேற்று மாலையிலிருந்து இரவு வரை சென்னை புறநகர் பகுதிகளில் காற்று,இடி,மின்னலுடன் மழை பெய்தது. இரவு 7 மணியளவில் மழை சிறிது ஓய்ந்திருந்தபோது, சஞ்சனா தனது தம்பியுடன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது மொட்டைமாடியில் அமைக்கப்பட்டிருந்த விளக்கு கம்பியை கையால் பிடித்த சஞ்சனா மீது மின்சாரம் பாய்ந்தது. அதனால் தூக்கி வீசப்பட்ட சஞ்சனா மயங்கி விழுந்தாா். இதனை கண்ட பிரபஞ்சன் பயந்து அலறி கூச்சலிட்டாா். உடனே சகிகலா ஓடிவந்து பாா்த்து பதறினாா். அக்கம்பக்கத்தினா் உதவியுடன் குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.

இதையடுத்து சிட்லப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதோடு இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!