ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: நீதி கேட்டு பள்ளி முற்றுகை

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: நீதி கேட்டு பள்ளி முற்றுகை
X

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நீதி கேட்டு பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை சம்பவத்தில் உறவினர்கள் நீதி கேட்டு பள்ளி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் லதா இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் ஹரிணி(17), 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

பல்லாவரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளி பள்ளியில் 11ம்வகுப்பு படித்து வரும் இவர், நேற்று முன் தினம் தேர்வு எழுதும் போது பார்த்து எழுதியதால் குழந்தை தெரசா என்ற உடற்கல்வி ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உளைசலுக்கு ஆளான மாணவி நேற்று வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பள்ளி ஆசிரியரை கைது செய்யக்கோரியும், மாணவி இறப்பிற்கு நீதி கேட்டும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!