பல்லாவரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது
X
ரேஷன் அரிசி கடத்தியதாக, கைதானவர்கள்.
By - S.Kumar, Reporter |24 Nov 2021 10:45 AM IST
பல்லாவரத்தில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
சென்னை பல்லாவரம், பழைய டிரங்க சாலையில், தலைமை காவலர் மதியழகன் என்பவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற சரக்கு வாகனத்தில் இருந்து, சாலையில் அரிசி கொட்டிக் கொண்டே சென்றது. போலீசார், அந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்து, சோதனையிட்டதில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.
விசாரணையில் ஆலந்தூர் ஆசர்கானாவில் உள்ள ரேஷன் கடையில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் குரோம்பேட்டையை சேர்ந்த அருண்குமார்(37), என்பவரும், ராஜலிங்கம்(31), என்பவரும் சேர்ந்து அரிசி கடத்தியது தெரியவந்தது. இருவரையும் பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து சென்று சரக்கு வாகனம் மற்றும் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, தாம்பரம் முடிச்சூரில் உள்ள தெற்கு மண்டல் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu