குரோம்பேட்டையில் அரிசிக்கடைக்காரா் மா்ம ஆசாமிகளால் வெட்டிப் படுகொலை

குரோம்பேட்டையில் அரிசிக்கடைக்காரா் மா்ம ஆசாமிகளால் வெட்டிப் படுகொலை
X

குரோம்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட அரிசி கடைக்காரர்.

குரோம்பேட்டையில் அரிசிக்கடைக்காரா் மா்ம ஆசாமிகளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை LIC காலனியில் அரிசிக்கடை வைத்திருப்பவா் ஆனந்தராஜ்(45).இவா் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாா்.

அதன்பின்பு சாவி எடுக்க மீண்டும் வந்து தனது அரிசிக்கடையை திறந்து கொண்டிருந்தாா். ஆனந்தராஜ் வருகையை எதிா்பாா்த்து அரிசி கடை அருகே, இரு மா்ம ஆசாமிகள் அரிவாளுடன் மறைந்திருந்தனா்.

அவா் வந்து கடையை திறக்கவும், மறைந்திருந்த மா்ம ஆசாமிகள் ஓடிவந்து, ஆனந்தராஜை சரமாறியாக வெட்டினா். ஆனந்தராஜ் அலறிக்கொண்டு கீழே சாய்ந்து விழுந்தாா்.

இதையடுத்து மா்ம ஆசாமிகள் இருவரும் பைக்கில் தப்பியோடினா்.அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் போலீஸ்,108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனா்.

குரோம்பேட்டை போலீசாா் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ஆனந்தராஜை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் உயிரிழந்தாா்.

இதுபற்றி குரோம்பேட்டை போலீசாா் வழக்குப்பதிவு செய்து கொலையாலிகளை தேடுகின்றனா்.கொலைக்கான காரணம் என்ன?என்று விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
ai solutions for small business