குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மீண்டும் திறப்பு

X
மீண்டும் திறக்கப்பட்ட குரோம்பேட்டை சரவணாஸ்டோர்ஸ்
By - S.Kumar, Reporter |8 Jan 2022 1:45 PM IST
குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் கடையானது நேற்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மூடப்பட்டது.
250 பேருக்கு மேற்கொள்ளபட்ட சோதனையின் முடிவில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டதன் காரணமாக கடை மூடப்பட்டது.
பின்னர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டனர். இன்று மீண்டும் கடை திறக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் கேட்ட போது கிருமி நாசினி தெளிக்கபபட்டு ஒரு நாள் கழித்து கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கடையை திறக்க அனுமதிப்பதாக தெரிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu