அடையாறு ஆற்றில் லாரி கழிவு நீர் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

அடையாறு ஆற்றில் லாரி கழிவு நீர்  கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
X

அடையாறு ஆற்றில் லாரிகளில் கொண்டு வந்து கழிவு நீர் கொட்டப்படுகிறது.

அடையாறு ஆற்றில் லாரிகளில் கழிவு நீர் கொண்டு வந்து கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல், அனகாபுத்தூர், நாகல்கேணி, உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் இருந்து தினந்தோறும் லாரிகள் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீரினை திருநீர்மலை சர்வீஸ் சாலை அருகில் அடையாறு ஆற்றில் சட்ட விரோதமாக பட்டப்பகலில் கொட்டி வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுநீரினை பெருங்குடியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு செல்லப்படவேண்டும். ஆனால் சில அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஒத்துழைப்புடன் அருகிலுள்ள அடையாறு ஆற்றில் கழிவுநீரினை கொட்டி வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மாசடைவதுடன் நிலத்தடி நீரும் மாசடைகிறது. குறிப்பாக கழிவு நீரை கொண்டு சென்று ஊற்று வதற்காகவே பள்ளம் தோண்டி வழி அமைத்து வைத்துள்ளனர்.

கழிவுநீரை அடையாறு ஆற்றில் கொட்டிச் செல்லும் கழுவுநீர் லாரிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!