எஸ்எஸ்எல்சி சமூக அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு நலத் திட்டம் வழங்கல்

எஸ்எஸ்எல்சி சமூக அறக்கட்டளை சார்பில்  குழந்தைகளுக்கு நலத் திட்டம் வழங்கல்
X

பள்ளி சிறுமிகளுக்கு உணவு வழங்கும் காட்சி

பரங்கிமலை மழலையர் பள்ளியில் எஸ்எஸ்எல்சி சமூக அறக்கட்டளை சார்பில் மழலை குழந்தைகளுக்கு நலத்திட்ட ம் உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்,டு மாவட்டம் பரங்கிமலை பட்மேடு சாலையில் அமைந்துள்ள காந்தி கன்டோன்மென்ட் மழலையர் பள்ளியில் எஸ்.எஸ் எல் எஃப் என்கின்ற தனியார் அமைப்பின் சார்பில் இந்தப் பள்ளியில் பயிலும் ஏழை-எளிய மழலையர் சிறுவர் சிறுமிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் புத்தகப்பை எழுதுபொருள் பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை எஸ் எஸ் எல் எப் அமைப்பின் தலைவர் டாக்டர் சக்திவேல் அவர்கள் கலந்துகொண்டு வழங்கினார.

பின்னர் பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமியர்களுக்கு மதிய உணவாக அருஞ்சுவை பிரியாணி வழங்கப்பட்டது.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைப்பின் தலைவர் டாக்டர் சக்திவேல் பேசியதாவது.

கோவை சரவணம்பட்டியில் நடந்த 14 வயது பெண் குழந்தைக்கு எதிரான வன்கொடுமை மற்றுமபெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இரக்கமற்ற முறையில் நடந்து கொள்ளும் இந்த அரக்கர்களை கண்டறிந்து அந்த அரக்கன்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

மேலும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம் பாலியல் குறித்த விழிப்புணர்வை மனம் விட்டுப் பேசி அவர்களுக்கு இளம் வயதிலேயே புரியும் வகையில் புரிதல் அறிவை வளர்த்திட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பரங்கிமலை கண்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி தினேஷ்குமார். தொழிலதிபர் ஜெ.குமரன். கணக்குத்துறை இயக்குனர் சுகேந்திரன் ஜிபி ராமன், பாபு, M.செல்வம் S.மோகன்ராஜ் பள்ளியின்தலைமை ஆசிரியை எப்சி சாந்தகுமார். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை எஸ்.எஸ்.எல் எஃப் சிட்டிஅண்ட் ஹவுசிங் என்கின்ற தனியார் தொண்டு நிறுவன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil