பல்லாவரம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை

பல்லாவரம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை
X

சென்னை பல்லாவரத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரம் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பல்லாவரம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ. என்ற தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் இன்று காலை தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!