காவல் நிலையத்தில் இருந்து தப்பிய விசாரணை கைதி மீண்டும் சிக்கினார்

காவல் நிலையத்தில் இருந்து தப்பிய விசாரணை கைதி மீண்டும் சிக்கினார்
X
சங்கர் நகர் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், கணபதி நகரில், போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தி கொண்டிருந்த அஜித்குமார் (24), வினித், அரவிந்த் குமார், கெளதம் ஆகியோரை கைது செய்த சங்கர் நகர் போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வந்தனர்.
விசாரித்து கொண்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரில் அனகாபுத்தூரை சேர்ந்த அஜித்குமார் என்பவர் சிறுநீர் கழிக்க செல்வதாகக்கூறி, சங்கர் நகர் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் முன்னிலையிலேயே தப்பிச் சென்றனர்.
பின்னர் சங்கர் நகர் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் சக போலீசார், இரவு முழுவதும் தேடி, தப்பியோடிய அஜித்குமாரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டைடால் என்ற 90 வலி நிவாரணி போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!