பல்லாவரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம், போலீசார் குவிப்பு
பல்லாவரம் தர்கா சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும்பணி நடைபெற்றது.
பல்லாவரத்தில் தர்கா செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய வட்டாச்சியர் மற்றும் நகராட்சி அலுவலக அதிகாரிகள் பாதுகாபிற்காக ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் ஹஸ்ரத் சைய்யது பதுரூதீன் தர்கா சாலை ஆக்கிரமிப்புகளை வட்டாச்சியர் மற்றும் பல்லாவரம் நகராட்சி அலுவலக அதிகாரிகள் அகற்றினர்.
பல்லாவரம் தர்கா நிர்வாக தலைவர் முகமது காசிம்பாய் 2018 ஆம் ஆண்டு சாலை ஆக்கிரமிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்க்கின் தீர்ப்பு 2021 ஆகிரமிப்புகளை அகற்ற கோரி பல்லாவரம் நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கபட்டு அதற்க்கான ஆவணங்களை வழங்கியது.
இது குறித்து தர்கா சாலை ஓரங்களில் ஆகிரமிப்புகளை அகற்றுவதற்க்கான எச்சரிக்கை நோட்டீஸ்கள் முன்னதாக ஓட்டப்பட்ட நிலையில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் வருவாய் ஆய்வாளர், நில அளவையாளர் முத்துகுமார், பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அலுவலர் பாஸ்கர், நகரமைப்பு ஆய்வாளர் சுரேஷ், நளினிதேவி மற்றும் பல்லாவரம் காவல் உதவி ஆணையாளர் ஆரோக்கியரவீந்திரன், ஆய்வாளர் வெங்கடேசன் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டன.
பாதுகாப்பிற்காக ஏராளமான போலிசார் குவிக்கபட்டிருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது நின்று கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu