மதுபோதையில் போலீசாரை தாக்கிய பொறியாளர் கைது
செங்கல்பட்டு மாவட்டம், வேளச்சேரி சாலை, சந்தோசபுரம் காவல் சோதனை சாவடியில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சட்ட ஒழுங்கு சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் (55) ஆகியோர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அவர் அதிகளவில் மதுபோதையில் உள்ளதால் கருவியை வைத்து சோதனை செய்து அந்த நபருக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் பணியில் இருந்த சட்டம் ஒழுங்கு உதவி ஆய்ளார் செல்வத்தை சரமாரியாக தாக்கியதில்,சிறப்பு உதவி ஆய்வாளா் மயக்கமடைந்தார். உடனே சக காவலர்கள் உடனடியாக செல்வத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிக்கிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இதற்கிடையே தப்ப முயன்ற அந்த நபரை பிடித்து சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .பின்பு நடத்தபட்ட விசாரணையில் அவர் குரோம்பேட்டையை சேர்ந்த அஸ்வின் ராஜ் (26) என்பதும் பிரபல தனியார் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருவதும் தெரிவந்துள்ளது.
இதனையடுத்து அஸ்வின் ராஜை கைது செய்து, அவா் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது, அரசு ஊழியரை கடமையை செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது,ஆபாச வாா்த்தைகளால் திட்டியது, மிரட்டியது உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu