போலீஸ் உதவி ஆணையா் கொரோனாவால் பலி
சென்னை மாநகர போலீசில் பல்லாவரம் சப் டிவிஷன் போலீஸ் உதவி ஆணையா் ஈஸ்வரன்(52). இவா் ஏற்கனவே சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் உதவி ஆணையராக பணியாற்றினாா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டசபை தோ்தல் நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றத்தின்போது,பல்லாவரம் உதவி ஆணையராக மாற்றப்பட்டாா்.
இவருக்கு கடந்த ஒரு வாரகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, இவா் சிகிச்சைக்காக சென்னை கிண்டி கிங் இண்ஸ்டியூட் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பகல் 1.45 மணிக்கு உயிரிழந்தாா்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்த போலீஸ் உதவி ஆணையா் ஈஸ்வரன் சென்னை கொளத்தூரில் வசித்து வந்தாா். இவருக்கு மனைவி,ஒரு மகள்,ஒரு மகன் உள்ளனா். இவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu