பணம் எடுக்க சென்றவர் ஏடிஎம் மிஷின் அறையில் அடித்து கொலை ? போலீசார் விசாரணை

பணம் எடுக்க சென்றவர் ஏடிஎம் மிஷின் அறையில் அடித்து கொலை ? போலீசார் விசாரணை
X

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே ஏடிஎம் மிஷினில் பணம்  எடுக்க சென்றவர் அடித்து கொலை.

பல்லாவரம் அருகே பணம் எடுக்க சென்றவர் ஏடிஎம் மிஷின் அறையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் கிரிஸ்டோபர்(44), இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பணத் தேவைக்காக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுப்பதற்காக திருநீர்மலை சாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ஏடிஎம் கார்டை மிஷினில் சொருகியவாறு உள்ளது. கிறிஸ்டோபர் தலையில் ரத்த காயங்களுடன் உள்ளேயே இறந்து கிடந்துள்ளார். இதனை ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவர்கள் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற சங்கர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததால் யாரேனும் அடித்து கொன்றனரா என்ற அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்