பல்லாவரத்தில் விசிக வேட்பாளர் முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

பல்லாவரத்தில் விசிக வேட்பாளர் முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு
X

பல்லாவரம் 20 ஆவது வார்டில் போட்டுயிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பல்லாவரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தாம்பரம் நகராட்சி பல்லாவரம் 20 ஆவது வார்டில் போட்டுயிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை பல்லாவரம் அம்பாள் நகர் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட தெருக்களில் இன்று தாம்பரம் மாநகராட்சி 20 வது வார்டில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் முத்துக்குமார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெற்றி பெற்ற பிறகு அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், மழைநீர் வடிகால்வாய், தரமான சாலைகள், மின் விளக்கு, குப்பை மேலாண்மை, உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தரப்படும் என உறுதி அளித்தார்

அவருடன் கட்சியின் 20-வார்டு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட பொருளாளர் பம்மல் சுப்ரமணி மற்றும் பல்லாவரம் தொகுதி செயலாளர் திருநீர்மலை தமிழரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா, மாவட்ட அமைப்பாளர் தனசேகர், நகரத் துணைச் செயலாளர் அமர்நாத் வட்டச்செயலாளர் பரணி குமார் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். .

Tags

Next Story
ai marketing future