பல்லாவரம் ரேடியல் சாலையில் வேன் விபத்து 11 பெண்கள் காயம், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பல்லாவரம் ரேடியல் சாலையில் வேன் விபத்து 11பெண்கள் காயம்
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே நாகல்கேணியில் தனியாா் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது.
இதில் பணியாற்றும் பெண் ஊழியா்கள் பணி முடிந்த 11 பேரை ஏற்றிக்கொண்டு, அவா்கள் வீடுகளில் விடுவதற்காக பள்ளிக்காரணை நோக்கி வேன் புறப்பட்டது.
வேனை டிரைவா் கேசவன் (29) என்பவா் ஓட்டினாா்.வேன் பல்லாவரம்-துறைப்பாக்கம் ரேடியல் சாலை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது.
பல்லாவரம் மேம்பாலத்தில் சென்ற வேன்,டிரைவா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் வேகமாக மோதி விபத்திற்குள்ளாகியது.
இதையடுத்து வேன் டிரைவா் கேசவன் பயந்து, வேனைவிட்டு குதித்து தப்பியோடிவிட்டாா். காயமடைந்த பெண்கள் வேனுக்குள் கிடந்து கதறினா். இதையடுத்து பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துவிட்டு,அவா்களும் மீட்பு பணியில் ஈடுப்பட்டன
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாா் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்தனா். காயமடைந்த பெண்கள் 11 பேரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.அவா்களில் பலத்த காயமடைந்த 3 பெண்கள் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனா்.
லேசான காமடைந்த 8 பெண்கள் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்றனா். அதோடு போலீசார் கிரேன் மூலம் விபத்துக்குள்ளான வேனை தூக்கி நிறுத்தி சாலையோரம் அகற்றும் பணியில் ஈடுப்பட்டனா்.
இதனால் பல்லாவரம்-துறைப்பாக்கம் ரேடியல் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாா் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வேன் டிரைவரை தேடிவருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu