கொசுவை விரட்ட புகை; ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்

பைல் படம்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த, பம்மல், திருவள்ளுவர் தெரு, பொன்னி நகரில் ஒரு வீட்டில் நான்கு பேர் இரவு தூங்கியுள்ளனர். இன்று காலை வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து வீட்டில் இருந்து புகை வெளியே வரத்துவங்கியுள்ளது.
இதனை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் உள்ளே சென்று பார்த்த போது நான்கு பேர் படுத்த நிலையில் இருந்துள்ளனர்.
பின்னர், நான்கு பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பலட்சுமி(55) என்ற பெண் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மீதமுள்ள சொக்கலிங்கம்(61), விஷால்(11), மல்லிகா(38), மூவரின் நிலை மோசமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைகாக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் கொசு தொல்லை இருப்பதால் புகை மூட்டம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர், அதே போல் நேற்றிரவும் புகை போட்டுள்ளனர். இதனால் உருவான புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu