தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் ஓமிக்கிரான் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கெருகம்பாக்கத்தில் வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் கெருகம்பாக்கம் பிரதான சாலையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கொரோனா மற்றும் ஓமிக்கிரான் தொற்று பரவாமால் தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க கோரி வியாபாரிகள் சங்க தலைவர் புஷ்பராஜ் தலைமையில் பொதுசெயலாளர் சீனிபாடியன் முன்னிலையில் பேரணி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். பின்னர் கடைகளுக்கு சென்று முககவசம் வழங்கப்பட்டன/
முன்னதாக முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு மலர்தூவி மரியதை செய்து வீரவணக்கம் மற்றும்.புகழ்வணக்கம் செலுத்தபட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓருங்கிணைப்பாளர் அருண்குமார் பேசுகையில் ஓமிக்கிரான் தொற்று வராமல் தடுப்பதற்க்காக முககவசம் வழங்கப்பட்டன. வியாபாரிகள் மத்தியில் முககவசம் அணிவது சற்று குறைந்துள்ளதால் இந்த விழிப்புணர்வு பேரணி எனவும் கொரோனவால் வியாபாரிகள் பாதித்துள்ளனர் என்றும்
தங்கள் உயிரை பனையம் வைத்து வியாபாரம் செய்ததாகவும், மேலும் அனைத்து கடைகளிலும் ஒரே விலை விற்க்கபடும் போது ஆன்லைன் வர்த்தகர்கள் குறைவான விலைக்கு விற்பது நியாயமற்றது. அவர்களுக்கு அரசு கூடுதல் வரி போட வேண்டும் எனவும் ஆன்லைன் வர்த்தகம் தொடருமானால் அனைத்து வணிக சங்கங்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்தபடும் என தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu