கோரிக்கை நிறைவேற்றாவிடில் நாடு தழுவிய போராட்டம்: மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம்

கோரிக்கை நிறைவேற்றாவிடில் நாடு தழுவிய போராட்டம்: மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம்
X

குரோம்பேட்டையில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

15 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய போராட்டம். மணல் லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் ராஜாமணி பேட்டி

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் தங்களது 15 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆலோசனை கூட்டம் அதன் மாநில தலைவர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் ராஜாமணி அரசு ஆண்டுக்கு ரூ.250கோடி வருவாய் கிடைத்திடவும், மனல்லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், லட்சக்கணக்கான கட்டுமான கட்டிட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகம் முழுவதும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை இயக்க நடவடிக்ககை வேண்டுகிறோம்.

லாரிகளில் லோடு ஏற்றும்போது கண்டிப்பாக தரச்சான்றிதழ் நகல் வழங்கப்பட வேண்டும். லாரிகளுக்கு லோடு ஏற்றும்போது பகுப்பாய்வு அறிக்கை நகல் வழங்கப்பட வேண்டும். பொதுப்பணித்துறையிடம் அனுமதி பொறாமல் தரமற்ற செயற்கை மணல் உற்பத்தி செய்யும் கிரசர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் இயக்கும் அனைத்து செயற்கை மணல் நிறுவனங்களிலும் ஓரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

தற்சமயம் அனைத்து செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்களும் திடீரென ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.300 வரை விலையேற்றம் செய்ததை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒட்டு மொத்த லாரி உரிமையாளர்களை திரட்டி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!