அன்னை தெரசா மாற்றுதிறனாளிகள் நல அறக்கட்டளையின் 3 ஆம் ஆண்டு ஆண்டுவிழா

பம்மல் அன்னை தெரசா மாற்றுதிறனாளிகள் நல அறக்கட்டளையின் 3 ஆம் ஆண்டு ஆண்டுவிழா
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மல் தனியார் மண்டபத்தில் பம்மல் அன்னை தெரசா மாற்றுதிறனாளிகள் நல அறக்கட்டளையின் 3 ஆம் ஆண்டு ஆண்டுவிழா இயக்குநர் செல்வி கவிதா தலைமையில் தலைவர் பம்மல் கலா, ஊழியர் அருணகிரி, ஆறுமுகம், செயலாளர் பம்மல் தேவி, பொருளாளர் திலகவதி முன்னிலையில் வெகுவிமர்சியாக கொண்டாட்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரகதம்குமாரவேல், பம்மல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாலு, செங்கல்பட்டு மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி, ஆம் ஆத்மி கந்தசாமி, சென்னை மாற்று திறனாளி நல அலுவலர் சீனிவாசன், உரையாடல் நிபுணர் ஞானரத்தினராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினர்.
முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேல் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடினர். இதனை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளான காதொலி கருவி, தானியங்கி முன்று சக்கர வாகனம், மடக்கும் இருசக்கர வாகனம், ஊன்றுகோல், தையல் மிஷின், சுயதொழில் செய்ய மெழுகுவர்த்தி டை இயந்திரம், உள்ளிட்டவை வழங்கப்பட்டன ஆண்டு விழாவில் சிறுவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்று திறனாளிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu