வாக்கு சேகரிக்கும் போது வேட்பாளரை கடித்த வெறி நாய்: பிரசாரத்தில் சோகம்

வாக்கு சேகரிக்கும் போது வேட்பாளரை கடித்த வெறி நாய்: பிரசாரத்தில் சோகம்
X
வேட்பாளர் தினகரனின் பிரசாரத்தின் போது இரவில் தெரு நாய் நடமாட்டம் இருந்தது. 
வாக்கு சேகரிக்க சென்ற மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளரை கடித்த வெரி நாய்

தமிழகத்தில், நகர்ப்புற தேர்தலில் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூர் 2வது வார்டில் போட்டியிடும் மக்கள் நீதி மையக் கட்சி வேட்பாளர் தினகரன், பாலாஜிநகர் பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். .

அப்போது, ஒரு வீட்டிற்கு சென்ற இடத்தில், வேட்பாளர் தினகரனை, வெறி நாய் ஒன்று எதிர்பாராதவிதமாக கடித்துவிட்டது. அவரது இடது முழங்கால் பகுதியில் கடித்ததால், அவர் வலியால் துடித்தார். எனினும், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டு கொண்டு திரும்பவும், வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அப்போது அப்பகுதி மக்களிடம் கூறுகையில் இப்பகுதியில் வெறி நாய்கள், தெரு நாய்கள் நடமாட்டம் உள்ளது. இவற்றை பிடித்துச் செல்ல மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்துவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
why is ai important to the future