பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
X

தொழிலாளி விழுந்த சாலையோர பள்ளம்.

பல்லாவரத்தில், பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில், பாதாள சாக்கடை பணியானது நடைபெற்று வருகிறது. இதற்காக 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, காங்கீரிட் போடப்பட்டுள்ளது. இருப்பினும் காங்கிரீட்ட்டின் பக்கவாட்டில் பள்ளத்தை முழுமையான மூடப்படாமல் இருந்துள்ளது.

இரு தினங்களாக மழை பெய்து ஈரப்பதமாக இருந்ததால், இன்று காலை பணிக்கு வந்த கல்கத்தாவை சேர்ந்த கூலித் தொழிலாளியான திரேஸ் சர்க்கார்(50), என்பவர் மேலே கால் வைத்த போது மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சென்ற சிட்லபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture