சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா ஆலயத்தில் கும்பாபிஷேகம்

சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா ஆலயத்தில் கும்பாபிஷேகம்
X

பம்மல் அண்ணா நகரில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா ஆலயத்தில் நடந்த மகா கும்பாபிஷேகம் 

பம்மல் அண்ணா நகரில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவ்ரம் அடுத்த பம்மல் அண்ணா நகர் பகுதியில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா ஆலய கும்பாபிஷேகம் கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் வெகுவிமர்சியாக நடைபெற்றது.

முன்னதாக இக்கோவிலில் 10 நாட்கள் யாக பூஜை செய்து புனிதநீரை சிவஸ்ரீ குப்புசாமி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத மேள, தாளத்துடன் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அபிஷேகம் செய்த கலசநீர் பக்தர்களுக்கு தெளிக்கபட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அப்பகுதி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!