திரிசூலத்தில் அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு

திரிசூலத்தில் அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு
X

திரிசூலத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது

திரிசூலத்தில் 12 கோடி மதிப்பிலான அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டு 13 வீடுகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை.

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், ஜே.ஜே.நகர், அம்மன் நகர், சுவாமி நகர் விரிவு, சிவசக்தி நகர் ஆகிய பகுதிகளில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 77 ஏக்கர் நிலப்பரப்பில், 1000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு மக்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் காலியாக உள்ள சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அவ்வப்போது வீடுகள் கட்டியும் குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில் நீதிமன்றம் அறநிலைக்கு சொந்தமான இடத்தை மீட்க உத்தரவிட்ட நிலையில், அறைநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறையினர் பாதுகாப்போடு கடந்த மாதம் 28ம் தேதி 2 வீடு மற்றும் நான்கு கடைகளுக்கு முதற்கட்டமாக சீல் வைத்தனர். அப்போது பொதுமக்களில் மூவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அவர்களை தடுத்து நிறுத்தி, தற்காலிகமாக சீல் வைக்கும் பணியை நிறுத்தினர்.


இன்று பலத்த போலீஸ் பாதுகாப்போடு வந்திருந்த அறநிலைய துறை அதிகாரிகள், கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு அவர்களது 13 வீடுகளுக்கு சீல் வைக்கபட்டது. மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு 12 கோடி என அதிகாரிகள் தெரிவித்த அதிகாரிகள், தொடர்ந்து மீட்கும் பணி நடைபெறும் எனவும் கூறியுள்ளனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..