பல்லாவரம் மலை குட்டையில் கஞ்சா பொட்டலம்- 7 பேர் கைது

பல்லாவரம் மலை குட்டையில் கஞ்சா பொட்டலம்- 7 பேர் கைது
X

கைதானவர்கள். 

பல்லாவரம் மலை குட்டையில் கஞ்சா பொட்டலம் போட்டுக் கொண்டிருந்த 7 பேர் கைது

சென்னை பல்லாவரம் அடுத்த பழைய பல்லாவரம், கவிதா பண்ணை அருகில் மலைக்குட்டை பகுதியில் சிலர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக, பொட்டலம் போட்டுக் கொண்டிருப்பதாக பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆய்வாளர் தயாள் தலைமையிலான போலீசார், மலைக்குட்டை பகுதியில் அதிகாலை சென்று கண்காணித்த போது அங்கு சிலர் கஞ்சாவை பொட்டலம் போட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்த 7 பேரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் இவர்கள் பல்லாவரம், மடிப்பாக்கம், நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கோபிநாத் (20), போவாஷ் (20), ஹரிபிரகாஷ் (22), நித்தியகுமார் (42), ஆகாஷ் (19), அருண் (21), சரவணன் (28), என தெரியவந்தது. இதில் சரவணன் என்பவர் முதலாமாண்டு சட்டக்கல்லூரி மாணவர், மற்றும் போவாஷ் என்பவர் அரசு கல்லூரி மாணவர் ஆவார். தமிழக டிஜிபி அவர்களின் ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.Oன் கீழ் 2 கிலோ கஞ்சா, 6 செல்போன், ஒரு, இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!