அனகாபுத்தூரில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

அனகாபுத்தூரில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது
X
அனகாபுத்தூரில், ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், ஆற்றங்கரை ஓரம் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக, சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சங்கர் நகர் ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் கருப்புசாமி, ராமசந்திரன், காவலர்கள் செர்லின், கண்ணன் ஆகியோர், நிகழ்விடத்திற்கு சென்று கண்காணித்த போது, கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.

ஆட்டோவில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்த, மாங்காட்டை சேர்ந்த சிவசங்கர் (25), கோவூரை சேர்ந்த இந்துநாதன் (35), மவுலிவாக்கத்தை சேர்ந்த முரளி (29), கெருகம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (எ) பாட்டில் மணி (27), ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். நான்கு பேர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!