திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் பாதுகாப்பு கேள்விக்குறி: முதல்வர் பழனிச்சாமி பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் பாதுகாப்பு கேள்விக்குறி: முதல்வர் பழனிச்சாமி பேச்சு
X
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரத்தில் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற வேட்பாளரை ஆதரித்து கீழ்கட்டளை பேருந்து நிலையம் அருகில் திறந்த வேனில் தொண்டர்கள், கூட்டணி கட்சி தொண்டர்கள்,பொது மக்கள் சூழ தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது பேசிய முதல்வர் பழனிச்சாமி,' திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலே சொல்லப்பட்டது. சட்டமன்றத்தில் ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்த போது சட்டமன்றத்தில் பேச எழுந்தார். அவரை தாக்கி சேலையை உருவி தலைமுடியை இழுத்த கட்சி தான் திமுக. இவர்களிடம் ஆட்சி பொறுப்பை கொடுத்தால் என்ன ஆகும்? ஜெயலலிதாவுக்கு இந்த நிலைமை என்றால் ஏழை எளிய மக்களுக்கு என்ன ஆகும்? அப்படி பட்ட கட்சிதான் திமுக. சட்ட மன்றத்தில் அராஜகம் செய்யும் கட்சி திமுக. ஆகவே, திமுகவை தவிர்க்கவேண்டும் என அவர் பேசினார்.

Tags

Next Story
ai solutions for small business