திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: நீர் ஆறாக ஓடுவதால் அவதி!

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: நீர் ஆறாக ஓடுவதால் அவதி!
X

குடிநீர் குழாய் உடைப்பால் திருநீர்மலை நெடுஞ்சாலை ஆறுபோல் காட்சி அளிப்பதை காணலாம்.

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீரில் கலந்து சாலையில் ஆராக ஓடியதால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் பல்லாவரத்திலிருந்து திருநீர்மலை செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் ஆறுபோல் ஓடுகிறது. இந்த குடிநீர், அருகில் உள்ள கழிவுநீர் காலவாயில் கலந்து சாலைகளை முழுவதுமாக ஆக்கிரமித்து காணப்படுகிறது.

பொதுமக்கள் சாலை கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையில் அதிகமாக தேங்கும் நீரால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது.

பாதசாரிகள் சாலையை கடக்கும்போது கனரக வாகனங்கள் செல்வதால் சாலையில் உள்ள கழிவு நீர் பாதசாரிகள் மேல்படும் சூழல் உருவாகியுள்ளது. இருசக்கர வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை உடனடியாக சீர்செய்து சாலைகளில் தேங்கிய நீரை அப்புறபடுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்