பல்லாவரம் அருகே மாமூல் கேட்டு பிரியாணி கடை உடைப்பு: திமுக பிரமுகர் கைது

பல்லாவரம் அருகே மாமூல் கேட்டு பிரியாணி கடை உடைப்பு: திமுக பிரமுகர் கைது
X

பிரியாணி கடையை அடித்து உடைத்ததாக கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் தினேஷ் மற்றும் சுகுமார்.

மாமூல் கேட்டு தராததால் டீக்கடை மற்றும் பிரியாணி கடையை அடித்து உடைத்த திமுக பிரமுகர் கைது சிசிடிவி வெளியாகி பரபரப்பு.

மாமூல் கேட்டு தராததால் டீக்கடை, மற்றும் பிரியாணி கடையை அடித்து உடைத்த திமுக பிரமுகர் கைது சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதி 31வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரின் உறவினரான தினேஷ்(38), இவரும் இவரது நண்பருமான சுகுமார்(32), இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அந்த பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளில் மாமூல் கேட்டுள்ளனர். பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் கடையை அடித்து உடைத்து தகராறு செய்துள்ளனர்.

இது குறித்து கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளோடு சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திமுக பிரமுகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare