வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா:தேமுதிக வேட்பாளர் உறுதி

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா:தேமுதிக வேட்பாளர் உறுதி
X

தாம்பரம் மாநகராட்சி 10வது வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன்,  முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார். 

வாக்குறுதிகளை நிறைவேற்றவிட்டால் ராஜினாமா செய்கிறேன் எனக்கூறி, தாம்பரம் தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் வாக்கு சேகரித்தார்.

தமிழகம் நகர்ப்புற தேர்தலுக்கான இன்று இறுதி கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 10வது வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அவர் பம்மல் பகுதி மக்களிடையே வாக்குசேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், கூலித்தொழில் செய்யும் தொழிலாளர் வீட்டில் உள்ள பெண்களுக்கு, திருமண உதவியாக நான்கு கிராம் தங்கம், கொலை கொள்ளை திருட்டில் இருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் பாதுகாக்கும் வகையில் தெருக்கள் எங்கும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றார்.

மேலும், வீட்டிற்கு வாரம் இருமுறை 20லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். ஒவ்வொரு தெருக்களிலும் புகார் பெட்டி வைக்கப்படும். மாதம் ஒருமுறை வீடுதேடி சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று உள்ளிட்ட பத்து கோரிக்கை அடங்கிய மனுக்களை பொதுமக்களிடையே வழங்கினார். மேலும், வாக்குறுதி நிறைவேற்றத் தவறினால் ராஜினாமா செய்வேன் என்றும் கூறி, பம்மல் மூங்கில் ஏரி, திருவள்ளுவர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!