ஆடல் பாடலுடன் இல்லம் தேடி கல்வி குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ஆடல் பாடலுடன் இல்லம் தேடி கல்வி குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

கிழக்கு தாம்பரம் அடுத்த வினோபா நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி. 

கிழக்கு தாம்பரம் அடுத்த வினோபா நகர் பகுதியில், பாரம்பரிய ஆடல் பாடலுடன் இல்லம் தேடி கல்வி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் அடுத்த வினோபா நகர் பகுதியில் தமிழக அரசு அறிவித்துள்ள மாலை நேரத்தில் மாணவர்களின் இல்லங்களை தேடி கல்வி திட்டம் அறிமுக படுத்தப்பட்டது. இதில் வீடு தேடி கல்வி திட்டத்தின் குழுக்கள் மாணவர்களிடம் ஆடல், பாடல் மற்றும் நாடகம் முறையில் கல்வி கற்றுபடுத்துவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அனைவரும் கல்வி கற்க வலியுறுத்தியும் இல்லம் தேடி கல்விக்கான பயன்கள் குறித்து பாரம்பரிய ஒயிலாட்டம் மற்றும் கிராமிய பாடலுடன் விழிப்புணர்வு பிரச்சாரம், தெருக்களில் நடத்தபட்டது. இதில், வினோபா நகர் சுற்றியுள்ள பொதுமக்கள் சிறுவர்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்து, இல்லம் தேடி கல்விக்கான பயன்களை தெரிந்து கொண்டனர். தொடர்ந்து இது போன்று பல்வேறு இடங்களில், வீடு தேடி கல்வி திட்டத்தை மாணவர்களிடம் எடுத்து செல்லப்படும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்