திருநீர்மலை நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தகோரி ஆர்ப்பாட்டம்
தாம்பரம் மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகே டாக்டர் அம்பேத்கர் எழுச்சி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த திருநீர்மலை தாம்பரம் மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகே டாக்டர் அம்பேத்கர் எழுச்சி இயக்கம் சார்பில் திருநீர்மலை நீர்நிலைகளில்குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தி குடிநீர் ஆதாரமாக மாற்றகோரி நிறுவனர் கார்த்திக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர் அம்பேத்கர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருநீர்மலை என்ற பெயர் நீர்நிலைகள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும், ஆனால் தற்போது நீர்நிலை உள்ள ஏரி,குளம் போன்றவற்றில் குப்பை கழிவுகள் கொட்டபட்டு அசுத்தம் அடைவதால் பொதுமக்கள் பயன்பாடற்று உள்ளது.
நாகல்கேனி தோல்தொழிற்ச்சாலை கழிவுகள் கலக்கபடுவதால் நிலத்தடிநீர் மாசடைந்து காணப்படுகிறது. காமராஜபுரம் கல்குவாரியில் உள்ள நீர் குடிநீர் ஆதாரமாக திருநீர்மலை மக்கள் பயன்படுத்தபட்டு வருவதாகவும், இதனை மெட்ரோ பணியின் போது எடுக்கபடும் மணல் நீர்நிலை குவாரிகளை மூடுவதற்கு தடைசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் இதற்கு அரசு செவிசாய்க்க வில்லையெனில் திருநீர்மலை மக்களை ஓன்று திரட்டி தொடர் உண்ணாவிரத போரட்டம் நடத்த போவதாக தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் டாகடர் அம்பேத்கர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் ஏராளமனோர் கண்டன பதாகைகள் ஏந்தியவாறு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu