பல்லாவரம்: வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பல்லாவரம்: வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

பல்லாவரத்தில் வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து  நடந்த ஆர்ப்பாட்டம்.

பல்லாவரத்தில் வாழ்வுரிமை கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் சுங்கவரி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பேரூந்து நிலையம் அருகே பல்லாவரம் நகர வாழ்வுரிமை கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் சுங்கவரி கட்டண உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நேற்று நடைபெற்றது.

நகர செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணி, இளைஞர் அணி செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் காஞ்சி தீனன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வன்னிஅரசு கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மறும் சுங்க கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் அசோக் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!