சென்னையில் வாகன சோதனையில் சிக்கிய குற்றவாளிகள்

சென்னையில் வாகன சோதனையில் சிக்கிய குற்றவாளிகள்
X

சென்னையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்தனர்.

சென்னையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்கினர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், கல்லியம்மன் நகரில் சங்கர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை காவலர் குமார் மடக்கினார். இருவரும் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றனர். விரட்டி சென்ற போலீசார் ஒரு வழியாக ஒருவரை பிடித்தனர். ஒருவன் தப்பியோடி விட்டான். விசாரணையில் பிடிபட்ட நபர் பம்மல் பகுதியை சேர்ந்த பம்மல் சத்யா(23), என்பதும் இவர் மீது 4 கொலை வழக்கு உட்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகள், பழந்தண்டலத்தை சேர்ந்த நவீன்(20), கர்ணா(20), ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இதில் நவீன் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்த மூவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்