பல்லாவரம் அருகே பம்மலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

பல்லாவரம் அருகே பம்மலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது
X
பல்லாவரம் அருகே பம்மலில் சூதாட்டநடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை வைத்து நடத்தி வருபவர் கண்ணன்(45). இவர் தனது கடையில் வைத்து, வெளிமாநில காட்டன் சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளார்.

ஒரு ரூபாய்க்கு பந்தயம் கட்டி, பரிசு விழுந்தால், 80 ரூபாய் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி கடைக்கு வரும் கூலி தொழிலாளிகளிடம் சூதாட்டத்தை விளையாட வைத்துள்ளார். அதேபோல் மூங்கில் ஏரி பகுதியில் கண்ணன்(40), என்பவர் நடமாடும் காட்டன் சூதாட்டம் நடத்தி வந்துள்ளார்.

சூதாட்டம் நடக்கும் தகவலறிந்து இவர்கள் இருவரையும் சங்கர் நகர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!