குரோம்பேட்டையில் தம்பதி கழுத்தறுத்து கொலை: இருவர் கைது

குரோம்பேட்டையில் தம்பதி கழுத்தறுத்து கொலை: இருவர் கைது
X

கொலை செய்யப்பட்ட தம்பதி.

குரோம்பேட்டையில் தம்பதி கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் இராயபேட்டை, பிள்ளையார் கோயில் 1வது குறுக்கு தெருவில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு குடி பெயர்ந்து, வசித்து வருபவர்கள் ஆறுமுகம்(59), மஞ்சுளா(50), தம்பதி இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன், அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இதில் மூத்த மகள் வசந்தி(30), இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் அவருடன் இருந்து பிரிந்து சிட்லபாக்கம்த்தில் தனியே வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் பாடியை சேர்ந்த மோசஸ் என்பவருடன் காதல் மலர்ந்து முதல் கண்வருடன் விவாகரத்து பெறாமலேயே மோசஸ் என்பவருடன் முறையற்ற உறவில் இருந்து வருகிறார்.

மோசஸ் அடிக்கடி குடித்து விட்டு வசந்தியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். பலமுறை குடிக்காமல் இருக்க வசந்தி மோசஸிடம் அறிவுறுத்தியும் குடியை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

அதனால் விரக்தியடைந்த வசந்தி மோசஸை விட்டு சில தினங்களுக்கு முன்பு பிரிந்து வந்து விட்டார்.

இந்நிலையில் மோசஸ் வசந்தியை பிரிந்து இருக்க முடியாதாதால் வடந்திக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, நீ வரவில்லை என்றால் உன் அப்பா அம்மாவை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அதனை வசந்தி பொருட்படுத்தாமல் கண்டும் காணாமல் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் தனது அக்கா மகனுடன் வந்து வசந்தியின் தாய் தந்தையான ஆறுமுகம் மற்றும் மஞ்சுளா இருவரையும் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.

வசந்தி தனது பெறோருக்கு தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்காமல் இருந்ததால் சந்தேகமடந்து தனது சகோதரரிடம் நேரில் சென்று பார்க்குமாறு கூறியதின் பேரில் இருவருன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சென்ற சிட்லபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வந்த நிலையில், ஆந்திரா தப்பிச் சென்றிருப்பது தெரிந்து மோசஸ்(35), மற்றும் அவரது அக்கா மகன் 15 வயது சிறார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து சிட்லப்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் மோசசுக்கும் ஏற்கனவே திருமணமாகி வசந்தியுடன் முறையற்ற உறவில் இருந்ததாகவும் திடீரென விட்டுச் சென்றதால் ஆத்திரத்தில் வசந்தியின் அப்பா, அம்மாவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

இருவர் மீதும் 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்த சிட்லப்பாக்கம் போலீசார் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story