பல்லாவரம் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்
பல்லாவரம் நகராட்சியில் நடந்த கொரோனா விழிப்புணர்வு முகாம்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை பேரூந்து நிலையம் அருகே கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்க்கான தடுப்பு நடவடிகை எடுக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளுக்கு இணங்க பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமையில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே கொரோனா பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்களுக்கு கைகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என செய்யுமுறை விளக்கம் காண்பிக்கபட்டது.
முன்னதாக கொரோனா பரவாமல் தடுப்பு நடவடிக்கை குறித்து பல்லாவரம் ஆணையாளர் காந்திராஜ், சுகாதாரதுறை அலுவலர் கோவிந்தராஜீக்ஷ்லு, ஆய்வாளர்கள் லஷ்மிகணேசன், சிவகுமார், சுதர்சன், செல்வராஜ், முத்தையா, ஜெகதீசன் மற்றும் சுகாதார சர்வே பணியாளர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் ஏந்தியவாறு உறுதி மொழி ஏற்றனர்.
இதனை தொடர்ந்து ஆணையாளர் பேரூந்து மற்றும் பேரூந்து நிலையங்களில் உள்ள பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும், முககவசம் அணியுமாறு கேட்டுகொண்டார்.
மேலும் நகராட்சி ஆணையாளர் சர்வே பணியாளர்களிடம் கொரோனா குறித்து பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று தடுப்பு நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடுமாறு வலியுத்த வேண்டும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமனோர் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu