பல்லாவரம் எம்எல்ஏ-விடம் வாழ்த்துப் பெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்ற மாணவி

பல்லாவரம் எம்எல்ஏ-விடம் வாழ்த்துப் பெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில்  வென்ற மாணவி
X

.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சியடைந்த பல்லாவரத்தை சேர்ந்த கேத்ரீன்சரன்யா பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்

ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சியடைந்த பல்லாவரத்தை சேர்ந்த கேத்ரீன்சரன்யா பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் செம்மண் நகர் பகுதியை சேர்ந்தவர் கேத்ரீன் சரன்யா இவர் ஐ.ஏ,எஸ் தேர்வில் அகில இந்திய தேர்வாணையில் 157 வது இடத்தில் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்தத் தகவலை தெரிவிக்கும் வகையில், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கேத்ரின்சரன்யா கூறியதாவது: என்னுடைய வெற்றிக்கு ஊக்குவித்த எனது பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு எனது நன்றி. மேலும் டி.ஜி.பி.சைலேந்திரபாபு மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற தொடர் முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற பல்வேறு கல்விக் கழகங்கள் ஊக்குவித்தனர், மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு