பாஜக இளைஞரணி செயலாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி புகார் மனு

பாஜக இளைஞரணி செயலாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி புகார் மனு
X

பா.ஜ.க. இளைஞர் அணி செயலாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி முஸ்லீம் அமைப்புகள் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

பாஜக இளைஞரணி செயலாளர் திருநாவுக்கரசை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி முஸ்லீம் அமைப்புகள் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

பாஜகவின் மாநில இளைஞரணி செயலாளர் திருநாவுக்கரசு முகநூலில் தொடர்ந்து மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பதிவிட்டு வருகிறார். முப்படை தளபதி பிபின் ராவத்தின் உயிரிழப்பை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள் என்னும் தவறான தகவலை முகநூலில் பதிவிட்டு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார்.

அவர் பல்லாவரத்தில் இருக்கக்கூடிய தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.பல்கலைக்கழகத்தில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும், காவல்துறை அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் பல்லாவரம் காவல் நிலையத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் மாநில பொருளாளர் தமிம் அன்சாரி தலைமையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமுமுக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் S.முகமது நயினார், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் M.முஜிபூர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு