சென்னையில் பைக் மோதி டிராபிக் எஸ்ஐ படுகாயம்

சென்னையில் பைக் மோதி டிராபிக் எஸ்ஐ படுகாயம்
X

சென்னை விமான நிலையம் அருகே பைக் மோதியதில் படுகாயமடைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன்

சென்னையில் கல்லூரி மாணவர்கள் வந்த பைக் மோதி டிராபிக் எஸ்ஐ படுகாயமடைந்தார்.

சென்னை விமான நிலையம் அருகே நேற்று முதல்வர் வருகையின்போது போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன்(53) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வரும் கனரக வாகனங்களை திருப்பி விட்டு கொண்டிருந்தபோது கிண்டி நோக்கி வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு முகத்தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், விபத்து ஏற்படுத்தியவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவர் மதன்(21) மற்றும் அபீஸ் அகமது என்பது தெரியவந்தது. இருவரிடமும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா