உலக இரத்த கொடையாளர்கள் தினம்: செங்கல்பட்டில் 50 இளைஞர்கள் ரத்ததானம்!

உலக இரத்த கொடையாளர்கள் தினம்: செங்கல்பட்டில் 50 இளைஞர்கள் ரத்ததானம்!
X

புழுதிவாக்கத்தில் ரத்ததான முகாம் நடைபெற்ற காட்சி.

உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு புழுதிவாக்கத்தில் நடைபெற்ற சிறப்பு இரத்த தான முகாமில் 50 இளைஞர்கள் ரத்தானம் செய்தனர்.

உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் எழுச்சி நற்பணி சங்கம். மற்றும் அன்னை தெரேசா ரத்த வாங்கியும் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே புழுதிவாக்கம் பகுதியில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது

இதில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது ரத்தத்தை தானம் செய்தனர். முன்னதாக சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

நாம் ஒவ்வொருவரும் வழங்கும் ரத்தமானது மூன்று பேர் உயிரை காப்பாற்ற பயன்படுகிறது. மேலும் நமது உடலில் கேன்சர், மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கிறது. கர்ப்பிணிகள், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்கள் என அனைவருக்கும் பயன்படுகிறது.

தற்போது கொரோனா நோய் தொற்று காலத்தில் நலத்திட்ட உதவி, நிவாரண உதவிகள் வழங்கி வருபவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இளைஞர்களாகிய நீங்களும் முன் வந்து ரத்தம் தானம் செய்து உயிர்களை காத்திட முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் ரத்த கொடையாளிகள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!