/* */

பக்ரீத்தை முன்னிட்டு ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டும் இஸ்லாமியர்கள்

பல்லாவரத்தில் பக்ரீத் பெருநாள் விழாவை முன்னிட்டு ஆடுகளை வாங்க இஸ்லாமியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

பக்ரீத்தை முன்னிட்டு ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டும் இஸ்லாமியர்கள்
X

விற்பனைக்காக வந்துள்ள செம்மறி ஆடுகள்.

செங்கல்பட்டு மாவட்டம், கண்டோன்மெண்ட் பல்லாவரத்தில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. யாமொய்தீன் என்பவர் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் கிடாய் ஆடுகளை தரம் பிரித்து விற்று வருகிறார். ஆடுகளை இஸ்லாமிய சகோதரர்கள் குர்பானிக்காக வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து தொழிலதிபர் யாமொய்தீன் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பக்ரீத் பெருநாளை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இந்த ஆண்டு வியாபரம் நன்றாக உள்ளது ஆடுகளின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் விற்க்கபடுவதாகவும், ஆடுகளின் எடைக்கு ஏற்ப இஸ்லாமியர்கள் வாங்கி செல்கின்றனர்.

இங்கு செம்மறி ஆடு, வெள்ளாடு என அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு குர்பானிக்காக வாங்கி செல்வதாகவும். இவை ஆந்திரா, கர்நாடக, ராஜஸ்தான் மற்றும் உள்ளூர் பகுதிகளான சமயபுரம், திருச்சி கள்ளகுறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் இருந்தும் ஆடுகள் வந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் , ஒரு வருடத்திற்கு மேலான ஆடுகளையே விற்பனை செய்து வருகிறோம். இத்தொழிலை 10 ஆண்டுகாலமாக செய்து வருகிறோம் எனவும் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஆடுகள் குர்பானிக்காக விற்படுகிறது. இதனை உள்ளூர் மற்றும் சென்னை நகர பகுதிகளில் இருந்தும் வாங்கி செல்கின்றனர். ஆடுகளின் எடை 30 கிலோ முதல் 100 கிலோ எடை வரை இருக்கின்றன. அனைத்தும் பழுது இல்லாமல் தரமான ஆடுகள் எனவும் இதனை நாங்களே முன்னின்று குர்பானிக்காக சரிபார்த்து தருவதாக யாமொய்தீன் கூறினார்.

Updated On: 20 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...