அனகாபுத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி

அனகாபுத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற முயன்ற  சிறுவன் பலி
X

கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் போலீசார்.

அனகாபுதூரில் கிணற்றில் தவிழுந்த நண்பனை காப்பாற்ற முன்ற சிறுவன் பரிதாபமாக இறந்தார்.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், புண்ணியகோட்டி நகரில், காலியான மைதானத்தில் பாழடைந்த பழைய விவசாய கிணறு ஒன்று உள்ளது.
இந்த கிணற்றில் இன்று காலை மீன்களை வேடிக்கை பார்க்க திவின் குமார், அஸ்வின்,யுவராஜ் ஆகிய மூன்று சிறுவர்கள் சென்றனர்.
வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது மூன்று சிறுவர்களில் யுவராஜ் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற மற்ற இரண்டு சிறுவர்களும் கிணற்றில் இறங்கி கூச்சலிட்டனர்.
இதனை கேட்ட கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் கிணற்றில் இறங்கி யுவராஜ், மற்றும் அஸ்வினை காப்பாற்றி விட்டனர்.
யுவராஜை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய 10 வயது சிறுவன் திவின் குமார் மட்டும் கிணற்றில் மூழ்கி விட்டார். அவரை தாம்பரம் தீயணைப்பு துறையினர் தேடியும் கிடைக்காததால், கிணற்றில் இருந்த நீரை மோட்டார் வைத்து வெளியேற்றி சிறுவனை சடலமாக மீட்டனர்.
சிறுவனின் தந்தை உடலை போலீசாரிடம் தர மறுத்து சடலத்தை எடுத்து ஓட முயன்றார். அவரிடமிருந்து சங்கர் நகர் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சிறுவனின் தந்தை திருப்பதி இந்த கிணற்றை மூடவும் வேறு யாருக்கும் இனி இதுபோல் நடக்க கூடாது எனவும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்